பத்திரிக்கையாளர்களை மிரட்டும் மண் கடத்தும் மாஃபியா......

ஈரோடு அந்தியூர் ரவுண்டானா வழியாக பெர்மிட் இன்றி ஆயிரக்கணக்கான லோடு மண் கடத்துவது உண்மைதான் லாரி உரிமையாளர் பேசும் ஒப்புதல் வாக்குமூலம் ஆடியோ ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கோபி,பெருந்துறை, நம்பியூர், பவானி, திங்களூர் ஆகிய இடங்களில் வேளாண்மை நிலத்தை இலவசமாக சரி செய்து தருவதாகவும் , லோடுக்கு நூற்றுக்கணக்கில் பணம் தருவதாக கூறி அப்பாவி விவசாயிகளின் வறுமையை பயன்படுத்தி ஏமாற்றி விவசாய நிலத்தில் சுமார் 10 அடிக்கு மேல் மண் எடுத்து அருகிலுள்ள மாவட்டம், அண்டை மாநிலங்களுக்கு மண் கடத்துவதாக மாரிமுத்து, மகேந்திரன் பற்றி விரிவாக ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தோம். செய்தி வெளியானதை அடுத்து நவீன் என்ற கூறி கொண்ட லாரி உரிமையாளர் நள்ளிரவில் போன் செய்து , எங்களை மட்டும் ஏன் செய்தி வெளியிட்டீர்கள் , அந்தியூர் ரவுண்டானா அருகே இரவில் நின்றால் ஆயிரக்கணக்கான லோடு பர்மிட் இன்றியும், செங்கல் சூளை பர்மிட் வைத்தும் கடத்தப்பட்டு வருகிறது . அதை நீங்கள் செய்தி வெளியிட உடனே வாருங்கள் என்றும் அனைத்து மண் கடத்தும் நபர்கள் மீதும் செய்தி வெளியிட வேண்டும். ஒருத்தர் மீது மட்டும் செய்தி போட்டது தவறு என, மதுபோதையில் அனைத்து உண்மையும் பகிரங்கமாக பேசி உள்ளார் . இத்தனைக்கும் காரணம் மாமூல் அதிகாரிகள் லஞ்சம் வாங்கிக் கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பதே தான். இது நிலை தொடர்ந்தால் கொங்கு மண்டலம் செழிப்பான மண் முழுவதும் கடத்தப்பட்டு, வேளாண்மை நிலங்கள் தரிசாக மாற வாய்ப்பு அதிகம் உள்ளது. வேளாண்மை இடத்தில் மண் கடத்தும் கும்பலிடம் இருந்து அப்பாவி விவசாயிகளை காக்க , மண் கடத்தல் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தால் மட்டுமே மண் கடத்து கும்பல் சற்று பயப்படுவார்கள், இல்லையென்றால் அதிக லாபம் என்பதால் ஒரு சில ஆண்டுகளிலே வேளாண்மை நிலைகளை பல அடி ஆழம் தோண்டி விவசாயம் செய்யும் முடியாத அளவிற்கு கொண்டு சென்று விடுவார்கள் என்பது யாதரத்தமான உண்மை. ஈரோடு மாவட்ட கலெக்டர் நேரடியாக தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அப்பகுதி விவசாயிகளின் விருப்பம் ஆகும்